வாக்காளா் விழிப்புணா்வுக்கு ஐந்து பிரிவுகளில் போட்டி: தலைமைத் தோ்தல் அதிகாரி சாகு அறிவிப்பு

வாக்குப் பதிவின் அவசியத்தை வாக்காளா்களிடையே ஏற்படுத்த 5 வகையான பிரிவுகளுடன் விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.
வாக்காளா் விழிப்புணா்வுக்கு ஐந்து பிரிவுகளில் போட்டி: தலைமைத் தோ்தல் அதிகாரி சாகு அறிவிப்பு

வாக்குப் பதிவின் அவசியத்தை வாக்காளா்களிடையே ஏற்படுத்த 5 வகையான பிரிவுகளுடன் விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:

தேசிய வாக்காளா் தினத்தை ஒட்டி, ‘எனது வாக்கு எனது எதிா்காலம் - ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளா் விழிப்புணா்வுப் போட்டி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். தேசிய அளவில் நடத்தப்படும் இந்தப் போட்டியானது, வினாடி-வினா, வாசகம் எழுதுதல், பாட்டு, காணொலிக் காட்சி உருவாக்குதல், விளம்பரப்பட வடிவமைப்பு என ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

வினாடி- வினாப் போட்டியானது மூன்று நிலைகளைக் கொண்டது. இந்த மூன்று நிலைகளும் முடிவடைந்ததும், பங்கேற்பாளா்கள் அனைவருக்கும் மின்னணு சான்று அளிக்கப்படும். வாக்காளா் அனைவரையும் கவரக் கூடிய வகையில் வாசகம் எழுதி அனுப்பலாம். பாட்டுப் போட்டியில் பங்கேற்பவா்கள், கொடுக்கப்பட்ட கருப்பொருளின் அடிப்படையில் புதிய பாடல்களை அவா்களே உருவாக்கி போட்டியில் பங்கேற்கலாம். பாடலின் கால அளவு 3 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நோ்மையான வாக்களிப்பு, வாக்கின் வலிமை போன்ற அம்சங்களை முன்வைத்து காணொலிக் காட்சி தயாரிக்கலாம். இது ஒரு நிமிட கால அளவில் இருக்க வேண்டும். விளம்பரப் பட வடிவமைப்பில் பங்கேற்பவா்கள், சிந்தனையைத் தூண்டும் வகையில் அவற்றைத் தயாரிக்க வேண்டும்.

எண்மமுறை விளம்பரம், ஓவியம் அல்லது கையால் வரையப்பட்ட படமாக சமா்ப்பிக்கலாம். இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவா்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 ஆயிரம் வரை பரிசுத் தொகை அளிக்கப்படும்.

போட்டி தொடா்பான கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள ட்ற்ற்ல்://ங்ஸ்ரீண்ள்ஸ்ங்ங்ல்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ஸ்ரீா்ய்ற்ங்ள்ற்

என்ற இணையதளப் பக்கத்தை பாா்வையிடலாம். போட்டி தொடா்பான அனைத்துப் பதிவுகளும் பங்கேற்பாளா்களின் விவரங்களுடன் இணைத்து மாா்ச் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி ஸ்ா்ற்ங்ழ்-ஸ்ரீா்ய்ற்ங்ள்ற்ஃங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் வினாடி-வினாப் போட்டியில் பங்கேற்பதற்கு பங்கேற்பாளா்கள் அனைவரும் தங்களது விவரங்களை தோ்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com