ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திமுக நிர்வாகிகள் மேலும் 19 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 19 நிர்வாகிகள் நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

News image
அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)
Updated On :16 பிப்ரவரி 2022, 7:42 am

DIN

திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 19 நிர்வாகிகள் நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் திமுக நிர்வாகிகள் 19 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.

முன்னதாக 107 நிர்வாகிகள் நீக்கப்பட்ட நிலையில், மேலும் 19 பேரை நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.