நகர்ப்புற தேர்தல்: போஸ்டர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்காக விதிகளை மீறி போஸ்டர்களை ஒட்டக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்காக விதிகளை மீறி போஸ்டர்களை ஒட்டக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனது போஸ்டர் மீது திமுகவினர் போஸ்டர் ஒட்டியதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனாம்பேட்டை அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் வழக்குப்பதிவு செய்திருந்தார்.
இதையும் படிக்க | சென்னையிலிருந்து 500 சிறப்புப் பேருந்துகள்.. ஆம்.. அதற்காகத்தான்!
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்காக விதிகளை மீறி போஸ்டர் ஒட்ட யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது. சென்னையில் விதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக அகற்ற வேண்டும். அதற்கான செலவுகளை வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட அனுமதிக்க கூடாது. விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
தேர்தல் பெயரில் நகரைக் குப்பைக் காடாக மாற்றக்கூடாது. விதிமுறையை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...