பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 

சென்னை, தேனாம்போட்டை வாக்குச்சாவடியில் தனது வாக்கினை முதல்வர் ஸ்டாலின் பதிவு செய்தார். 

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 6:30 am

DIN

சென்னை, தேனாம்போட்டை வாக்குச்சாவடியில் தனது வாக்கினை முதல்வர் ஸ்டாலின் பதிவு செய்தார். 

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். 

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திரை பிரபலங்கள், பிரபலங்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அந்தந்த மாவட்டங்களில் வாக்களித்து வருகின்றனர். மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

Story image

இந்த நிலையில், சென்னை, தேனாம்போட்டை வாக்குச்சாவடியில் தனது வாக்கினை முதல்வர் ஸ்டாலின் பதிவு செய்தார். எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி துர்காவுடன் வரிசையில் நின்று முதல்வர் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் தோல்விக்கான காரணத்தை மூடி மறைக்க அதிமுக நாடகமாடியுள்ளது.

ராணுவம் வரும் அளவுக்கு கோவையில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.