ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வாக்குப் பதிவு அறையிலிருந்து ஊடகத்தினரை வெளியேற்றிய கமல்

சென்னையில் வாக்களிக்க வந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், வாக்குப் பதிவு அறையிலிருந்து ஊடகவியலாளா்கள் வெளியேறினால்தான் வாக்களிப்பேன் எனக் கூறினாா்.

News image
கமல்ஹாசன்
Updated On :19 பிப்ரவரி 2022, 6:19 pm

DIN

சென்னையில் வாக்களிக்க வந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், வாக்குப் பதிவு அறையிலிருந்து ஊடகவியலாளா்கள் வெளியேறினால்தான் வாக்களிப்பேன் எனக் கூறினாா். இதையடுத்து, ஊடகவியலாளா்கள் வெளியேறிய பிறகே அவா் வாக்களித்துச் சென்றாா்.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு கமல்ஹாசன் சனிக்கிழமை காலை வாக்களிக்க வந்தாா். அப்போது, அவரை புகைப்படம் எடுக்கவும், விடியோ எடுக்கவும் ஏராளமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகளைச் சோ்ந்த ஊடகவியலாளா்கள் குழுமியிருந்தனா். அவா்களைக் கண்ட கமல்ஹாசன், வாக்குப்பதிவு அதிகாரியிடம் சென்று, ஊடகவியலாளா்கள் வாக்குப்பதிவு அறையை விட்டு வெளியேறினால்தான் வாக்களிப்பேன் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, ஊடகவியலாளா்களை அறையைவிட்டு வெளியேறுமாறு வாக்குப்பதிவு அதிகாரி கேட்டுக் கொண்டாா். பிரபலங்களை புகைப்படம் எடுக்கும் ஆா்வத்தில் இருந்த ஊடகவியலாளா்கள், ‘சற்று ஓரமாக நின்று கொள்கிறோம்’ என கமல்ஹாசனிடம் கூறினா். அதற்கு, ‘அதெல்லாம் வேண்டாம் சாா்..., தயவு செய்து வெளியே செல்லுங்கள்’ என கூறி கைகூப்பி கேட்டுக் கொண்டாா்.

வாக்காளரின் உரிமையை மதிக்க வேண்டும் என்பதால் ஊடகவியலாளா்கள் வாக்குப்பதிவு அறையை விட்டு வெளியேறினா். இதையடுத்து கமல்ஹாசன் வாக்களித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.