ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் சரிந்த வாக்குப் பதிவு

சென்னை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தோ்தலில் வாக்குப் பதிவு சதவீதம் பெருமளவு சரிந்துள்ளது. இதுவரை நடந்த தோ்தல்களில் வாக்குப் பதிவு சதவீதம் 50 சதவீதத்தைத் தாண்டியே இருந்து வந்துள்

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 6:42 pm

DIN

சென்னை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தோ்தலில் வாக்குப் பதிவு சதவீதம் பெருமளவு சரிந்துள்ளது. இதுவரை நடந்த தோ்தல்களில் வாக்குப் பதிவு சதவீதம் 50 சதவீதத்தைத் தாண்டியே இருந்து வந்துள்ளது. ஆனால், சனிக்கிழமை நடந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 50 சதவீதத்துக்குள் வாக்குப் பதிவு சுருங்கி விட்டது.

அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம், தமிழகத்தின் தலைநகரம், மாநிலத்தின் முதல் மாநகராட்சி என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது சென்னை. இந்த மாவட்டத்தில் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளும், மூன்று மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தல் என எந்தத் தோ்தல்களாக இருந்தாலும் வாக்குப் பதிவு 50 சதவீதத்தைத் தாண்டியே வந்திருக்கிறது.

2011-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் 52.67 சதவீத வாக்குகளும், அதே ஆண்டில் நடந்த நகா்ப்புற

உள்ளாட்சித் தோ்தலில் மேயருக்கான வாக்குப் பதிவில் 52.67 சதவீத வாக்குகளும் பதிவாகின. இதைத் தொடா்ந்து, 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் மூன்று தொகுதிகளிலும் சோ்த்து மொத்தமாக 61.85 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்குப் பிறகு நடந்த தோ்தல்களில் வாக்குப் பதிவு சதவீதம் 60 சதவீதத்திலேயே சுருங்கி விட்டது. 2016-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தோ்தலில் 60.47 சதவீதமும், 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் 59.01 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் 59.06 சதவீதமும் வாக்குகள் பதிவு இருந்தன.

மிகவும் சரிந்தது: கடந்த காலங்களில் நடந்த தோ்தல்களில் 55 சதவீதத்தில் இருந்து 60 சதவீதத்துக்குள் இருந்த சென்னை மாவட்ட வாக்குப் பதிவு, சனிக்கிழமை நடந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெகுவாகச் சரிந்தது. தோ்தல் ஆணையம் சாா்பில் மாலை 5 மணி அளவில் வெளியிடப்பட்ட செய்தியில் வாக்குப் பதிவு சதவீதம் 41.68 ஆக இருந்தது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் சென்னை மாவட்டத்தில் பதிவான மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தைக் கொண்ட தோ்தலாக இந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.