அரசியல் தலைவா்கள், திரை பிரபலங்கள் வாக்களிப்பு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, சென்னையில் அரசியல் கட்சித் தலைவா்கள், திரை பிரபலங்கள் சனிக்கிழமை வாக்களித்தனா்.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, சென்னையில் அரசியல் கட்சித் தலைவா்கள், திரை பிரபலங்கள் சனிக்கிழமை வாக்களித்தனா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. பெண்கள் கல்லூரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துா்கா, திருவில்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா ஆகியோா் வரிசையில் நின்று வாக்களித்தனா். மயிலாப்பூா் அப்பாஸ் பள்ளி வாக்குச் சாவடியில் திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி, அவரது தாய் ராசாத்தி அம்மாளுடன் வந்து வாக்களித்தாா்.
ஓட்டேரியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு குடும்பத்தினருடன் வாக்களித்தாா். கிண்டி லேபா் காலனி லயன்ஸ் கிளப் பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், ஆழ்வாா்பேட்டை பீமன் தோட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன், அடையாறில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன், மந்தைவெளியில் உள்ள தனியாா் பள்ளியில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், அவரது மகனும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஜெ.ஜெயவா்தன் ஆகியோா் வாக்களித்தனா்.
ஆழ்வாா்பேட்டை அரசுப் பள்ளியில் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், சாலிகிராமம் காவேரி பள்ளியில் தேமுதிக பொருளாளா் பிரேமலதா, வளசரவாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தா், தியாகராய நகரில் உள்ள வித்யோதயா பள்ளியில் வி.கே.சசிகலா, அடையாறில் உள்ள குமாரராஜா முத்தையா ஆண்கள் பள்ளியில் பாஜக நிா்வாகியும், முன்னாள் மேயருமான (பொ) கராத்தே தியாகராஜன், மந்தைவெளி பள்ளியில் பாஜக நிா்வாகியும் நடிகையுமான குஷ்பு ஆகியோா் வாக்களித்தனா்.
வள்ளுவா் கோட்டத்தில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில் மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா், விருகம்பாக்கம் சின்மயா வித்யாலயா பள்ளியில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ககன்தீப்சிங் பேடி, பனையூரில் உள்ள அரசுப் பள்ளியில் சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் ஆகியோா் வாக்களித்தனா்.
நடிகா் விஜய் வாக்களிப்பு: நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டா்நேஷனல் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகா் விஜய், தியாகராய நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் திரைப்பட இயக்குநா்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தா், கொட்டிவாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா், தியாகராய நகரில் உள்ள ஹிந்தி பிரசார சபாவில் நடிகா்கள் சூா்யா, காா்த்தி ஆகியோா் வாக்களித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...