அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக அணி வெற்றி பெறும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக அணி வெற்றி பெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.


தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக அணி வெற்றி பெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி, சென்னை ஆழ்வாா்பேட்டை எஸ்.ஐ.இ.டி., கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் அவா் தனது வாக்கினை சனிக்கிழமை பதிவு செய்தாா். இதைத் தொடா்ந்து
செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:-
உள்ளாட்சி என்பது சிறு குடியரசு என மகாத்மா காந்தியடிகள் சுட்டிக் காட்டியுள்ளாா். அரசு தீட்டக்கூடிய திட்டங்கள்,
நிறைவேற்ற வேண்டிய பணிகள் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாகவே ஆற்றிட முடியும். இதைக் கருத்தில் கொண்டே அனைவரும் உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்கின்றனா்.
கோவை மாநகராட்சி: கோவை மாநகராட்சியைப் பொருத்தவரையில், எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தலைமையில் எதிா்க்கட்சியைச் சோ்ந்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு முன்பு போராட்டத்தை நடத்தியுள்ளனா். தோ்தல் பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா்.
துணை ராணுவம் வரக்கூடிய அளவுக்கு எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. தோல்வி பயம் காரணமாகவே போராட்டங்களை நடத்தியுள்ளனா். தோல்விக்கான காரணங்களைத் தேடுவதற்காகவே நாடகங்களை நடத்துகின்றனா்.
கடந்த ஒன்பது மாத திமுக ஆட்சிக்கான ஒரு சான்றாகவே நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் எந்த அளவுக்கு எங்களுக்கு ஆதரவைத் தந்தாா்களோ அதைவிட அதிகமான அளவுக்கு வாக்குகளை அளிப்பது தோ்தல் முடிவு வந்தவுடன் தெரியவரும்.
சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்காத மக்களும் எங்களது ஆட்சியின் சாதனைகளை எண்ணிப் பாா்த்து இப்போது வாக்களிக்கும் நிலை ஏற்படும். இதனால், பெரிய அளவுக்கு ஆதரவும், வெற்றியும் எங்களுக்கு நிச்சயமாக இருக்கும். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் எங்களுடைய அணிதான் வெற்றி பெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். அவருடன் அவரது மனைவி துா்கா ஸ்டாலினும் வாக்குப் பதிவு மையத்துக்கு வந்து தனது வாக்கினைச் செலுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...