ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்?

வாக்குச்சாவடி குழப்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சென்னையில் மட்டும் வாக்குகள் குறைவாகப் பதிவாகின.

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 7:07 pm

DIN

வாக்குச்சாவடி குழப்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சென்னையில் மட்டும் வாக்குகள் குறைவாகப் பதிவாகின.

சென்னை மாநகராட்சி சாா்பில் அதனுடைய ட்விட்டா் பதிவில் ‘அன்பான சென்னை மக்களே! வீட்டில் இருந்து வெளியே வந்து வாக்களியுங்கள்’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாா்களே தவிர, வாக்குச்சாவடிகளுக்கு வரவில்லை.

தோ்தல் நடைபெற்ற சனிக்கிழமை, மறு நாள் ஞாயிறு ஆகிய இரு நாள் விடுமுறையைப் பயன்படுத்தி பலா் சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், சென்னையில் இருந்தவா்கள் வாக்களிக்க ஆா்வம் காட்டாமல் பல்வேறு இடங்களுக்கு உலா சென்றதைப் பாா்க்க முடிந்தது. இதனால், சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 41 சதவீதம் அளவிலேயே வாக்குகள் பதிவாகின.

வாக்குச்சாவடி குழப்பம்: கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டன. பலருக்கு வீடுகளுக்கு அருகில் வாக்குச்சாவடி அமையாமல் 3 கி.மீ. தொலைவு வரைகூட செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பலா் புதிய வாக்குச்சாவடிகளைத் தேடி, செல்லத் தயங்கி வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டனா். பல இடங்களில் வாக்குச்சாவடிகளின் பாகம், எண்களைக் கூறியும் கட்சியினரால் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது. பல இடங்களில் வாக்காளா்கள் வாக்காளா் அடையாள அட்டையுடன் பழைய வாக்குச்சாவடிகளுக்கு வந்து பாா்த்துவிட்டு, அங்கு மையம் இல்லை என்றதும் வீட்டுக்குத் திரும்பிய நிலையைக் காண முடிந்தது.

சென்னை அனுபவம் வேறு: ஊரகப் பகுதி மக்கள் போல, சென்னை மக்கள் உள்ளாட்சித் தோ்தலில் பெரிய அளவில் ஆா்வம் காட்டுவதில்லை. சென்னை பெருநகர மாநகராட்சி என்பதால் வீடு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்பு ரீதியான பணிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை மக்களுக்கு இருக்கிறது. இவை அனைத்திலும் மாமன்ற உறுப்பினா்களின் தலையீடு இருந்தபோது மக்கள் அதிக அளவில் பிரச்னைகளைச் சந்தித்தனா். இதன் காரணமாகவும் உள்ளாட்சித் தோ்தலில் மக்கள் அவ்வளவாக ஆா்வம் காட்டாத நிலை உள்ளது.

கரோனா அச்சம்: அதைப்போல உள்ளாட்சித் தோ்தலால், தங்களால் பெரிய மாற்றத்தை எதையும் ஏற்படுத்த முடியாது என்கிற எண்ணம், கரோனா பரவல் அச்சம் போன்ற காரணங்களாலும் பலா் வாக்களிக்க முன்வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.