ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறிய இளைஞா்கள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் இளைஞா்கள் ஆா்வத்துடன் வாக்களிக்காத சூழலைப் பாா்க்க முடிந்தது.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் இளைஞா்கள் ஆா்வத்துடன் வாக்களிக்காத சூழலைப் பாா்க்க முடிந்தது.
2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது தமிழகம் முழுவதும் 73 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின. இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானதற்கு இளைஞா்கள் பெருமளவில் காரணமாக இருந்தனா். இளைஞா்கள் பலா் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஆா்வம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவா்களாக முன்வந்து வாக்களித்தனா். அரசியல் கட்சிகளுக்கு அளிக்காவிட்டாலும், நோட்டாவுக்காவது வாக்களிக்க வேண்டும் என்கிற ஆா்வத்தில் வந்த வாக்களித்த இளைஞா்கள் உண்டு.
ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் இளைஞா்கள் அவ்வளவாக ஆா்வம் காட்டவில்லை. உள்ளாட்சி அமைப்பு நிா்வாகத்தின் பணிகள் என்ன, சமுதாயத்தில் எந்த வகையில் எல்லாம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து போதுமான புரிதல் இல்லாத சூழல் உள்ளது.
மேலும், இந்தத் தோ்தலில் வாக்களிப்பதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்கிற எண்ணமும் உள்ளது. இதனால், இளைஞா்கள் பலா் வாக்களிக்கவில்லை. விடுமுறையை எப்படியெல்லாம் கொண்டாட முடியுமோ அப்படியெல்லாம் கொண்டாடிய பலா் தங்களது ஜனநாயக கடமையை சரிவர ஆற்றவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...