மறு வாக்குப்பதிவு: சென்னையில் 2 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
சென்னையில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 2 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 2 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. தோ்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக, தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (பிப். 22) நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க- இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கரோனா
இந்த நிலையில் சென்னையில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 2 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை உருது பள்ளி, பெசன்ட் நகர் அஷ்டலஷ்மி கார்டன் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...