சீர்காழி நகராட்சி வாக்குப்பெட்டிகள் பூட்டி சீல் வைப்பு

சீர்காழி நகராட்சி தேர்தல் 3 மணி வரை வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சேர்ப்பு; பூட்டி சீல் வைக்கப்பட்டு முப்பத்தொரு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு.
சீர்காழி நகராட்சி வாக்குப்பெட்டிகள் பூட்டி சீல் வைப்பு

சீர்காழி:  சீர்காழி நகராட்சி தேர்தலில் 3 மணி வரை வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டன. பூட்டி சீல் வைக்கப்பட்டு முப்பத்தொரு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

சீர்காழி நகர் மன்ற தேர்தல் நேற்று  நடைபெற்று முடிந்தது. 24 வார்டுகளில் 36 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இறுதியாக மாலை 5 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவு நிலவரப்படி சீர்காழி நகராட்சி தேர்தலில் 67.54 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 மணிக்கு மேல் சில வாக்காளர்கள் வாக்களிக்க மையத்திற்கு வந்தனர். ஆனால் 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததால்  அவர்கள் வாக்களிக்க இயலவில்லை.

அதனால் வாக்குப் பதிவுக்கு மையத்தில்  அந்த வாக்காளர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் 5 மணி முதல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் சீர்காழி நகர மன்றத் தேர்தல் நடைபெற்ற 24 வார்டுகளிலும் கரோனா தொற்றாளர்கள் யாரும் இல்லாததால் அவர்கள் வாக்களிக்க வில்லை.

இதனிடையே 6 மணிக்கு மேல் 24 வார்டுகளில் உள்ள 36 வாக்குப் பெட்டிகளும் வட்டார தேர்தல் பார்வையாளர் நாராயணன் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் இப்ராஹிம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காதர் கான், செல்லதுரை, சார்லஸ் மற்றும் பாலசுப்பிரமணியன் தேர்தல் பணியாளர்கள் ராஜ கணேஷ், ராஜரத்தினம், உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருந்தவர்கள்.

மூன்று மண்டலங்களாக வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு வாக்குப்பெட்டிகள் பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலிருந்து வாக்குப்பெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு இரவு 3 மணி வரை மையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு டிஎஸ்பி லாமெக்  தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  வாக்கு எண்ணும் மையத்தில் 31  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது .

இதேபோல் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

6 ஆயிரத்து 549 வாக்காளர்கள் உள்ள நிலையில் 5,168 பேர் வாக்களித்தனர். 78.91 சதவீத  வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தேர்தல் நடத்தும் அலுவலர் மருதுபாண்டியன் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான மயிலாடுதுறை பள்ளிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com