திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம்: முதல்வர் ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :20 பிப்ரவரி 2022, 11:22 am

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிர்வாகி திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று இன்று நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், நாளை மறுநாள், நேற்றைய தினம் நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வரவிருக்கிறது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அந்த வெற்றிக்கு இடையில் இந்த திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன்.  இங்கே அண்ணன் துரைமுருகன் உள்ளிட்ட சிலர் பேசுகிறபோது, அவர் அதிகம் பேசமாட்டார் என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். என்னைப் போன்றுதான் அவரும் அதிகம் பேசமாட்டார். நானும் அதிகம் பேசமாட்டேன்.

இப்போதுகூட தேர்தல் நேரத்தில் காணொலிக் காட்சியில் நான் பேசி முடித்துவிட்டேன். மக்களைச் சந்திக்க வருவதற்கு தைரியம் இல்லை என்று என்னைப்பற்றி சிலர் பேசினார்கள். என்னைப் பார்த்து, மக்களைப் பார்க்க தைரியம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். 

எதற்காக நான் காணொலிக் காட்சியின் மூலமாக அந்தப் பிரசாரத்தை நடத்தினேன் என்று கேட்டால், கரோனா காலமாக இருக்கின்ற காரணத்தால், அந்தத் தொற்றுக்காக அரசு சில விதிமுறைகளை அறிவித்திருக்கின்ற காரணத்தால்தான், நான் நேரடியாகச் செல்லவில்லை. 

அதே நேரத்தில் நான் பேசிய அனைத்துக் கூட்டங்களிலும் சொன்னேன், தேர்தல் முடிந்து அதனுடைய வெற்றி விழா நடக்கின்ற போது, நிச்சயமாக உறுதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன் என்று சொல்லி இருக்கிறேன். 

ஏன் வரவில்லை என்று கேட்டவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, “மழைக்காலத்தில் நான் வெள்ளப் பகுதிகளுக்கு சென்றபோது, ஏனப்பா இப்போது வருகிறாய், உடம்பை ஏனப்பா கெடுத்துக் கொள்கிறாய்” என்று அக்கறையோடு கேட்கும் நிலையில்தான் இன்றைக்கு மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். 

எனவே தேர்தல் நேரத்தில் பணியாற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் அன்பகம் கலை அவர்களுடைய இல்ல மணவிழா நிகழ்ச்சியின் மூலமாக, என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளை, பாராட்டுதல்களை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.