நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே நன்றி நோட்டீஸ் அடித்து தயாராக வைத்துள்ளனர்.
மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட 33 வார்டுகளுக்கு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட திமுக, அதிமுக, அமமுக, தேமுதிக, பாமக, நாதக, சிபிஐ, பாஜக ஆகிய அரசியல் கட்சிகளின் சார்பிலும், சுயேச்சைகள் என 142 பேர் களத்தில் உள்ளனர்.
உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்,சனிக்கிழமை நடைபெற்று. நாளை (பிப்.22), செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாமல்,தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், மன்னார்குடியில் உள்ள அச்சகங்களுக்கு வந்து, தங்கள் கட்சியின் வேட்பாளருக்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்த வார்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து நோட்டீஸ் அச்சிட்டு வாங்கிச் சென்றுள்ளனர்.
ஒரே வார்டை சேர்ந்த வேறுவேறு கட்சியை சேர்ந்தவர்களும் ஒரே அச்சகத்தில் வெற்றி பெற்றதற்காக நன்றி நோட்டீஸ் அடித்து சென்றிருப்பதும் பல அச்சகங்களில் நடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டுமனை பட்டா, வீடு கட்டும் திட்டம் என அனைத்திலும் திமுக ஊழல்: அதிமுக

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

நாட்டறம்பள்ளியில் வேட்புமனு பரீசீலனையின்போது ரகளை!

ஆன்லைன் வா்த்தக நிறுவன கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


