ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஓமலூரில் 3 பேரூராட்சிகளையும் கைப்பற்றியது திமுக

ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூன்று பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 7:47 am

DIN

 
ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூன்று பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
 
ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் ஓமலூர், கருப்பூர் மற்றும் காடையாம்பட்டி பேரூராட்சிகள் உள்ளன. இதில் பதிவான வாக்குகள் ஓமலூர் பாத்திமா பள்ளி வளாகத்தில் எண்ணப்பட்டன. 

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஓமலூர் பேரூராட்சியில் (மொத்தம் – 15), திமுக-11, அதிமுக-2, தமாகா -1, சுயேச்சை – 1 வெற்றி பெற்றுள்ளனர். 11 இடங்களைப் பிடித்து ஓமலூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. 

கருப்பூர் பேரூராட்சியில் (மொத்தம் -15) திமுக-10, காங்கிரஸ்-1, அதிமுக – 3, சுயேச்சை – 1 வெற்றி பெற்றுள்ளனர். 10 இடங்களில் வென்று கருப்பூர் பேரூராட்சியை திமுக வசப்படுத்தியுள்ளது.

காடையாம்பட்டி பேரூராட்சியில் (மொத்தம்-15) திமுக -7, அதிமுக – 7 என சமமாக வெற்றி பெற்றுள்ளன. திமுக கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளதால், காடையாம்பட்டி பேரூராட்சியும் திமுக வசம் சென்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.