

திருச்சி அருகே உள்ள பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியை நிர்ணயிக்கும் வகையில் சுயேச்சைகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினருக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை திருச்சி காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி இன்று நடைபெற்றது.
இதில் 6 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும், 4 இடங்களில் திமுக வேட்பாளர்கள், 2 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடம் என வெற்றி பெற்றுள்ளது.
இதனால் பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியை நினைக்கும் இடத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.