எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

'இன்னுயிா் காப்போம்' திட்டம்: 188 ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் தொடக்கிவைத்தார்

'இன்னுயிா் காப்போம்-நம்மைக் காக்கும் 48' திட்டத்தின் கீழ் 188 ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். 

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 7:01 am

DIN

'இன்னுயிா் காப்போம்-நம்மைக் காக்கும் 48' திட்டத்தின் கீழ் 188 ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். 

சாலை விபத்துகளில் சிக்குவோரைக் காக்கும் ‘இன்னுயிா் காப்போம்-நம்மைக் காக்கும் 48’ என்ற புதிய திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி தொடக்கிவைத்தாா்.

Story image

சாலை விபத்துகளால் பாதிக்கப்படுவோரின் முதல் 48 மணி நேர அவசர மருத்துவ சிகிச்சை செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இத்திட்டத்திற்கென பயன்படுத்தும் வகையில் 188 ஆம்புலன்ஸ் வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்காக செங்கல்பட்டு சித்தாலப்பாக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். இத்துடன் தமிழகத்தில் செயல்படும் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1491 ஆக அதிரித்துள்ளது.

Story image

மேலும், 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் 50 லட்சமாவது பயனாளிக்கு வீடு தேடிச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்துப் பெட்டகம் வழங்கினார். செங்கல்பட்டைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி பாஞ்சாலியின் வீட்டிற்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்து, மருந்துப் பெட்டகத்தையும் வழங்கினார். அப்பகுதியில் உள்ள மேலும் சில பயனாளிகளுக்கும் முதல்வர் நேரில் சென்று மருந்துப் பெட்டகம் வழங்கினார். 

Story image

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.