மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காலமானார்: பேராசிரியர் ப. குருசந்தர்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் முனைவர்.ப.குருசந்தர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.

News image

பேராசிரியர் முனைவர். குருசந்தர்

Updated On :2 ஜனவரி 2022, 9:03 am

வாழப்பாடி:  சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் முனைவர்.ப.குருசந்தர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். இவர்களுக்கு இலக்கிய அமைப்பினர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர், அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த வடகுமரை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் பேராசிரியர் ப.குருசந்தர். 20 ஆண்டுகளுக்கு முன், தமிழ் திரைப்படங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற இவர், சேலம் சௌடேஸ்வரி கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். 
 இவருக்கு ரத்னா என்ற மனைவியும், பொறியாளர் குருமணிபாரதி என்ற மகனும், மருத்துவர். குருதாரணி என்ற மகளும் உள்ளனர்.

திரைத்துறை மீது தீராத பற்று கொண்ட முனைவர் ப.குருசந்தர், 'பரிகாரம்' என்ற படத்தை தயாரித்து இயக்கி இதில் நடித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, இலக்கியப் பணியாற்றி வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விழாவில் இவருக்கு சிறந்த பேராசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அயோத்தியாப்பட்டணத்திலுள்ள இவரது இல்லத்தில் காலமானார். இவரது உடல், ஆத்தூர் அடுத்த வடகுமரை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இவரது உடலுக்கு இலக்கிய அமைப்பினர், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ- மாணவியர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் உறவினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாலை 3 மணியளவில் இகறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 97902 12679.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.