மானாமதுரை ஆஞ்சனேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள ஆஞ்சனேயர் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மானாமதுரை வீர அழகர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவர் ஸ்ரீ வீர ஆஞ்சனேயர் சுவாமி.









