கருட பகவனை தரிசிப்பதால் விலகும் தோஷங்கள்
சர்ப தோஷங்கள், நாக தோஷங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள், திருமணத்தடை, புத்திரத்தடை, பூமிதோஷம், வாகனத்தடை, கல்வித்தடை, உத்தியோகத்தடை, ஏழரை சனி தோஷங்கள், வெளிநாடு செல்லும் தடைகள் மற்றும் குடும்பத்தடைகள் மேலும் வாகன விபத்து, கண்டங்கள், தோல் வியாதிகள் போன்ற பல்வேறு விதமான தடைகள் விலகும். விஷ்ணுவின் அருள் கிடைத்து நற்கதி அடையலாம். தீராத நோய்கள் மற்றும் பார்வை கோளாறுகள் தீரும், மருத்துவ செலவுகள் குறையும், மனக்குழப்பம் நீங்கி தெளிவும் பெறலாம். தைரியம் பெருகும், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் அனைவரும் அழிவர். எதிரியற்ற நிலை உருவாகும். கூர்மையான அறிவு, கூர்மையான புத்தி, கூர்மையான பார்வை கிடைத்து ஆயுள் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். பண வரவு அதிகரிக்கும். மகாலட்சுமி கடாக்ஷம் கிடைக்கும். நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்கிறார் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கையிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.