25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

எடப்பாடியில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எடப்பாடி நகரப் பகுதியில் கட்டுப்பாட்டுகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். 

News image
எடப்பாடியில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:01 am

DIN


எடப்பாடி: தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எடப்பாடி நகரப் பகுதியில் கட்டுப்பாட்டுகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். 

Story image

எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் எடப்பாடி காவல் ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், உதவி ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் தலைமையிலான காவல்துறையினர். நகராட்சி ஆணையாளர் சேகர்,மேலாளர் பழனியப்பன் தலைமையிலான நகராட்சி சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினர் நகராட்சி பகுதியில் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறிடும் வகையில் பயணிப்போர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி அபராதம் விதித்து வருகின்றனர். 

மேலும் முகக் கவசம் அணியாமல் பயணிக்கும் நபர்களுக்கு காவல்துறை சார்பில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

Story image

செவ்வாய் அன்று நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விடுக்கப்பட்டது. தொடர்ந்து எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட, ஜெ.கே.பி ரோடு , சேலம் பிரதான சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில்  காவல்துறையினர் கரோனா கட்டுப்பாட்டு விதிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.