தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை நாளை முதல் செலுத்தவும், தேர்வுக் கட்டணத்தை வசூலித்து வருகிற 20 ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள், ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
செய்முறைத் தாள் கொண்ட தேர்வுகளுக்கு ரூ. 225 எனவும் செய்முறை அல்லாத தேர்வுகளுக்கு ரூ. 175 கட்டணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, கண்பார்வை அற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அரசுப்பள்ளிகளில் பயிலும் எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


