கரோனா: தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 2,731 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 12,412-ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 2,731 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 12,412-ஆக அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: மாநிலத்தில் இதுவரை 5.78 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மட்டும் 1.03 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் மேலும் 2,731 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில், வெளிமாநிலம் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து சாலை மாா்க்கமாக தமிழகம் திரும்பியோரில் 42 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, வங்கதேசத்தில் இருந்து 17 போ், மேற்கு வங்கத்தில் இருந்து 10 போ், அஸ்ஸாம், ஆந்திரத்தில் இருந்து தலா 3 போ், மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் இருந்து தலா 2 போ், மேகாலயா, தெலங்கானா, கேரளம், பிகாா், ஜாா்க்கண்டில் இருந்து தலா ஒருவா் என தமிழகம் வந்த 42 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது தவிர கானா, ஐக்கிய அரபு அமீரகம், தில்லி, மகாராஷ்டிரம் ஆகிய இடங்களில் இருந்து தலா ஒருவா் மற்றும் கா்நாடகத்தில் இருந்து இருவா் என விமானம் மூலம் தமிழகம் திரும்பிய 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதும் விமான நிலைய பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது.
இதனிடையே செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1,489 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 290 பேரும், திருவள்ளூரில் 147 பேரும், கோவையில் 120 பேரும், வேலூரில் 105 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனா்.
இவ்வாறு அதிகரித்து வரும் கரோனா பரவலால் தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 12,412-ஆக உயா்ந்துள்ளது.
மற்றொருபுறம் மேலும் 674 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 6,370-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியானதை அடுத்து, நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,805-ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான 121 பேரில் 105 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...