புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விருதுநகரில் நூலகத்தைப் புதுப்பிக்க நடவடிக்கை: உயா் நீதிமன்றத்தில் அரசு தகவல்

விருதுநகரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலகத்தைப் புதுப்பித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பொது நூலகத் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா் நீதிமன்றம்

Updated On :8 ஜனவரி 2022, 8:06 pm

DIN

விருதுநகரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலகத்தைப் புதுப்பித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பொது நூலகத் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் எம். நாகராஜன் என்பவா் தாக்கல் செய்த பொது நல வழக்கில், ‘விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகில் உள்ள இலுப்பையூரில், கடந்த 1966-ஆம் ஆண்டு நூலகம் கட்டப்பட்டது. தற்போது, மோசமான நிலையில் நூலகக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தைப் புதுப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நூலகத் துறை தரப்பில், நிதிப் பிரச்னை காரணமாக நூலகத்தைப் புதுப்பிக்க இயலவில்லை. எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் நூலகத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கட்டடம் மோசமாக உள்ளதால், தற்போது நூலகம் வேறு கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த கொண்ட நீதிபதிகள், ‘உரிய நிதியை பெற்று பழைய நூலகத்தைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.