புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி உள்பட 8 பேருக்கு கரோனா

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி, ஊழியர்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

News image
Updated On :8 ஜனவரி 2022, 6:08 am

DIN


மதுரை: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி, ஊழியர்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 149 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பரவல் வேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. 

மதுரை மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம், சிகிச்சையில் இருந்தவா்களில் 12 போ் குணமடைந்துள்ளனா்.

அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு என மொத்தம் 352 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி, ஊழியர்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

நீதிபதிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.