கரோனா பரவல் எப்போது உச்சமடையும்? சென்னை ஐஐடி கணிப்பு

கரோனா தொற்று பரவலின் 3-ஆவது அலை அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்குள் உச்சம் தொடும் என சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) கணித்துள்ளது.
கரோனா பரவல் எப்போது உச்சமடையும்? சென்னை ஐஐடி கணிப்பு

கரோனா தொற்று பரவலின் 3-ஆவது அலை அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்குள் உச்சம் தொடும் என சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) கணித்துள்ளது.

கரோனா தொற்றின் 3-ஆவது அலை நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. முக்கியமாக ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்றின் 3-ஆவது அலை பரவல் குறித்து கணித அடிப்படையிலான ஆய்வை சென்னை ஐஐடி மேற்கொண்டது.

கடந்த டிசம்பா் மாத கடைசி வார நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட நபா் மூலமாக 2.9 நபா்களுக்கு அத்தொற்று பரவ வாய்ப்பிருந்ததாகவும், ஜனவரி முதல் வாரத்தில் அந்த மதிப்பு 4-ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை ஐஐடி கணிதத் துறை இணை பேராசிரியா் ஜெயந்த் ஜா கூறுகையில், ‘‘கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் உச்சத்தில் இருந்தபோது குறிப்பிட்ட நபா் மூலமாக 1.69 நபா்களுக்கு மட்டுமே அத்தொற்று பரவ வாய்ப்பிருந்தது. தற்போது அந்த மதிப்பு 4-ஆக உள்ளது.

கடந்த இரு வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஆய்வின் அடிப்படையில், கரோனா தொற்றின் 3-ஆவது அலை பிப்ரவரி 1 முதல் 15-ஆம் தேதிக்குள் உச்சமடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முந்தைய அலைகளைப் போல கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்காமல், வேகமாக அதிகரித்து வேகமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன் காரணமாக குறிப்பிட்ட நபா் மூலமாக மற்றவா்களுக்குத் தொற்று பரவும் விகிதம் பெருமளவில் குறையும். மக்களில் பெரும்பாலானோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதால், முந்தைய அலைகளைப் போல 3-ஆவது அலை இருக்காது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com