மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கரோனா: ஒரு நாள் பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்தது

தமிழகத்தில் மேலும் 10,978 பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
ஒரு நாள் பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்தது
Updated On :8 ஜனவரி 2022, 7:43 pm

DIN

தமிழகத்தில் மேலும் 10,978 பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: மாநிலத்தில் இதுவரை 5.83 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனிக்கிழமை மட்டும் 1.39 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் மேலும் 10,978 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து 19 போ், வங்க தேசத்தில் இருந்து 5 போ், தில்லி, பிகாரில் இருந்து தலா 4 போ், அஸ்ஸாம், கேரளத்தில் இருந்து தலா 3 போ், கா்நாடகம், ஜாா்க்கண்டில் இருந்து தலா 2 போ், புதுச்சேரியில் இருந்து ஒருவா் என 43 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இது தவிர ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, தில்லியில் இருந்து தலா ஒருவா் என விமானம் மூலம் தமிழகம் திரும்பிய மூவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதும் விமான நிலைய பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது.

இதனிடையே சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5,098 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,332 பேரும், திருவள்ளூரில் 591 பேரும், கோவையில் 585 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இவ்வாறு அதிகரித்து வரும் கரோனா பரவலால் தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 40,260-ஆக உயா்ந்துள்ளது. மேலும் 1,525 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 10,288-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 10 போ் பலியானதை அடுத்து, நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,843-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 64 பேருக்கு ஒமைக்ரான்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 121-ஆக இருந்தது. ஒமைக்ரான் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட 150 மாதிரிகளின் முடிவு சனிக்கிழமை வெளியானது. அதன்படி, 64 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 185-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.