முழு  ஊரடங்கு: வெறிச்சோடியது நாகை மாவட்டம்

முழு ஊரடங்கால் நாகை மாவட்டப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.
வெறிச்சோடி காணப்பட்ட நாகை புதிய பேருந்து நிலையம்.
வெறிச்சோடி காணப்பட்ட நாகை புதிய பேருந்து நிலையம்.

நாகப்பட்டினம்: முழு ஊரடங்கால் நாகை மாவட்டப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.

கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மக்கள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்ட நாகை சாலைகள்.

பொதுப்போக்குவரத்து சேவைகள் தடைசெய்யப்பட்டன.மருந்து,பால் கடைகள்செயல்பட்டு வருகின்றன. நாகை, நாகூர், வேளாங்கண்ணி,கீழ்வேளூர் மற்றும் மாவட்டத்தின் பிறப்பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. 

நாகை  புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நீலா கிழக்கு வீதி,தெற்குவீதி, மார்க்கெட் பகுதி  மற்றும் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடியுள்ளது. நகரின் முக்கியச் சாலைகளில் போலீஸார்  தடுப்புகள்அமைத்துப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.
 
மாவட்ட எல்லைகளில் 8 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருவோர்களின் வாகனங்களை போலீஸார் சோதனைக்குட்படுத்தி, பின்னர்  அனுப்பிவைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com