போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 10 பேருக்கு கரோனா

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 6 மாணவர்கள் மற்றும் 4 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி
Updated On :10 ஜனவரி 2022, 12:25 pm

DIN

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 6 மாணவர்கள் மற்றும் 4 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் தொற்றுப் பரவலால் மாநிலங்கள் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மாணவர்கள் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.