முதியோர்களுக்கு இல்லம் தேடி தடுப்பூசி: சென்னை மாநகராட்சி
சென்னையில் 60 வயதைக் கடந்தவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இல்லம் தேடி சென்று பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள அவசியமுடையவர்கள் 1913, 044 2538 4520, 4612 2300 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.