
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13,990 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 11 பேர் உயிரிழந்தனர்.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 1,35,266 பரிசோதனைகளில் புதிதாக 13,990 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 11 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,866-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக கரோனாவிலிருந்து 2,547 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாக கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28,14,276-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 6,190 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,844-ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டவாரியாக பாதிப்பு
செங்கல்பட்டு 1,696, திருவள்ளூர் 1,054, கோவை 602, காஞ்சிபுரம் 508, மதுரை 330
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.