47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜல்லிக்கட்டு: 300 வீரர்கள்; 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 300 வீரர்கள் மற்றும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :10 ஜனவரி 2022, 10:03 am

DIN

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 300 வீரர்கள் மற்றும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் நிகழ் ஆண்டு ஜனவரி 14-இல் அவனியாபுரம், 15-ஆம் தேதி பாலமேடு, 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கால்நடை மருத்துவமனைகளில், ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு உடல் தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், நிகழ் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என ஏற்கனவே அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:

  1. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும்.
  2. எருதுவிடும் நிகழ்வில் 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.
  3. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற வேண்டும்.
  4. பங்கேற்கும் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். வீரர்கள் அனைவரும் நெகட்டிவ் சான்றிதழும் சமர்பிக்க வேண்டும். கரோனா நெகட்டிவ் சான்றிதழ் போட்டிக்கு இரண்டு நாளுக்கு முன்பு எடுத்திருக்க வேண்டும்.
  5. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 50 சதவீத இருக்கைகள் அல்லது 150 பார்வையாளர்கள்(இவற்றில் எது குறைவோ) மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  6. காளையுடன் அதன் உரிமையாளர் ஒருவர் மற்றும் உதவியாளர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவர்கள் இருவருக்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும்.
  7. ஜல்லிக்கட்டில் பங்கேற்கு காளை மற்றும் அதன் உரிமையாளர், உதவியாளர் பதிவை மூன்று நாள்களுக்கு முன்னதாகவே முடிக்க வேண்டும்.
  8. அடையாள அட்டை இல்லாதவர்கள் போட்டி நடக்கும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  9. வெளியூரில் இருப்பவர்கள் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.