மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழகத்தில் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image

அமைச்சர் பொன்முடி(கோப்புப்படம்)

Updated On :10 ஜனவரி 2022, 7:14 am

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.

கரோனா சூழல் சீரான பிறகு எழுத்துத் தேர்வுகள் நடைபெறும். தற்போது திட்டமிட்டபடி செய்முறைத் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.