போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

மதுரையில் ரூ. 114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  

News image
Updated On :11 ஜனவரி 2022, 12:49 pm

DIN

மதுரையில் ரூ. 114 கோடியில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலத்துக்கு  காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.  

மதுரையில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நினைவாக ரூ.114 கோடியில் கலைஞா் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதற்காக, மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

Story image

இந்நிலையில், கலைஞா் நினைவு நூலக கட்டுமானப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா காணொலிக்காட்சி மூலம் இன்று நடைபெற்றது. முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். 

Story image

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சா்கள் பிடிஆா். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என். நேரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.