தமிழகத்தில் ஜன.25 வரை சேவல் சண்டைக்குத் தடை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
தமிழகத்தில் ஜனவரி 25 ஆம் தேதி வரை சேவல் சண்டைகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.


தமிழகத்தில் ஜனவரி 25 ஆம் தேதி வரை சேவல் சண்டைகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.
கரூர்-அரவக்குறிச்சி தாலுகாவைச் சேர்ந்த பூலன்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி வரை சேவல் சண்டைகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு ஏன் சேவல் சண்டைகளை நடத்த அனுமதி வழங்கியது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, தேனி உத்தமபாளையத்தில் பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்த அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்ததுடன் சேவல் சண்டையில் சேவல்களின் கால்களில் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கட்டக்கூடாது என்றும் சேவல்கள் உயிரிழக்காத வகையில் சண்டை நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி சுவாமிநாதன் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு: எடப்பாடி கே.பழனிசாமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...