அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 80 பேர் காயம், மாடு முட்டி இளைஞா் பலி 

மதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் தினமான இன்று நடைபெற்றது. 
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 80 பேர் காயம், மாடு முட்டி இளைஞா் பலி 
Published on
Updated on
2 min read


மதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் தினமான இன்று நடைபெற்றது. 

காலை 7.30 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர்  அனீஸ்சேகர் முன்னிலையில்,
வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகிய கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் கட்டுப்பாடுகளின் படி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவர் ராஜா தலைமையில் மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்து பங்கேற்க செய்தனர்.

இதேபோல காளைகளை கால்நடைத்துறை இணை இயக்குனர் நட்ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்து தகுதியுள்ள காளைகளை போட்டிக்கு அனுப்பினார்.

ஜல்லிக்கட்டு போட்டி 7 சுற்றுகளாக நடைபெற்றது ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளுக்கு  தங்கக்காசு, கட்டில் பீரோ பசுமாடு சைக்கிள் ஏர்கூலர் ரெஃப்ரிஜிரேட்டர் வாஷிங் மெஷின் எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

நடைபெற்று முடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 39 பேர் மாட்டின் உரிமையாளர்கள் 24 பேர் பார்வையாளர்கள் 17 பேர் என மொத்தம் 80 பேர் காயமடைந்தனர்.

இதில் போட்டியை வேடிக்கை பார்க்க வந்த அவனியாபுரத்தில் சேர்ந்த குட்டீஸ் என்பவரது மகன் பாலமுருகன் வயது 18 காலை ஒன்று நெஞ்சில் குத்தியது அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த பாலமுருகன்(18)
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த பாலமுருகன்(18)

மேலும் போட்டியை கண்டுகளிக்கும் வகையில் 6 இடங்களில் பெரிய அளவிலான எல்சிடி டிவிகள் வைத்து போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் சார்பில் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com