திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கம்பம் நந்தகோபாலன் மாட்டுத்தொழு கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஸ்ரீ நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு கோயில் அடைக்கப்பட்டதால் மாட்டுப்பொங்கல் நாளான சனிக்கிழமை நுழைவுவாயிலில் ஆண் பெண் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

News image
கம்பம் நந்தகோபாலன் மாட்டுத்தொழு கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு
Updated On :15 ஜனவரி 2022, 9:39 am

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஸ்ரீ நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு கோயில் அடைக்கப்பட்டதால் மாட்டுப்பொங்கல் நாளான சனிக்கிழமை நுழைவுவாயிலில் ஆண் பெண் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தானமான  பூஞ்ஞாற்று தம்புரான் காலத்தைச் சேர்ந்தது அருள்மிகு ஸ்ரீ நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு.

இந்த  கோயிலில் மாட்டுப்பொங்கல் தினத்தன்று பட்டத்து காளைக்கு அலங்கரிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். இந்த நிகழ்வில் கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இங்கு உள்ள தொழுவிற்கு மாடுகளை காணிக்கையாகவும் வழங்குவார்கள்.

இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக அனைத்து வழிபாட்டுத்தலங்கள் அடைக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டதன் பேரில் இந்த கோயிலும் அடைக்கப்பட்டது.

இதனால் கோயில் அமைந்துள்ள நாட்டுக்கல் வீதியில் மக்கள் கூடுவார்கள் என்று போலீசார் பாதுகாப்பு செய்தனர்.

ஆனாலும் தெருவோரக் கடைகள், சிறுவர்கள் விளையாடும் ராட்டினம் போன்றவை அமைக்கப்பட்டிருந்தது. 

அடைக்கப்பட்ட கோயிலால் ஏமாற்றமடைந்தாலும்  நுழைவாயிலில் பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபாடு செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.