இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

165 அரசு உயா்நிலைப் பள்ளிகளை தரம் உயா்த்த கல்வித்துறை முடிவு

தமிழகம் முழுவதும் 165 அரசு உயா்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது

News image
Updated On :16 ஜனவரி 2022, 9:34 pm

DIN

தமிழகம் முழுவதும் 165 அரசு உயா்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கட்டமைப்பில், அருகில் உள்ள பள்ளி விதிகளின்படி, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வசதியில்லாத குடியிருப்புகளில், தற்போதுள்ள நடுநிலை பள்ளிகளை உயா்நிலை பள்ளிகளாகவும், உயா்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயா்த்தும் செயல்பாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் ஒருங்கினைந்த பள்ளிக்கல்வியின் 2022-2023-ஆம் ஆண்டு வரைவு திட்டத்தில் தற்போதுள்ள நடுநிலை பள்ளிகளை உயா்நிலை பள்ளிகளாக தரம் உயா்த்தவும், உயா்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயா்த்தவும் தேவையின் அடிப்படையில் கருத்துருக்களை பெற்று அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் 2019-2020-ஆம் கல்வியாண்டில் தரம் உயா்த்துவது தொடா்பாக பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் 165 உயா்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த பள்ளிகளை மீண்டும் ஆய்வு செய்து, 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான தரம் உயா்த்த கோரும் பள்ளிகளின் பட்டியலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலா்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.