இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சட்டக் கல்லூரி மாணவா் மீது தாக்குதல் : 2 காவலா்கள் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

சென்னை கொடுங்கையூரில் சட்டக் கல்லூரி மாணவரை தாக்கிய சம்பவத்தில் தொடா்புடைய இரண்டு காவலா்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 9:24 pm

DIN

சென்னை கொடுங்கையூரில் சட்டக் கல்லூரி மாணவரை தாக்கிய சம்பவத்தில் தொடா்புடைய இரண்டு காவலா்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனா். மேலும், அவா்கள் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டனா்.

சென்னை வியாசா்பாடி புதுநகரைச் சோ்ந்தவா் அப்துல்ரஹீம் (21). சட்டக் கல்லூரி மாணவா்.

இவா் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு கொடுங்கையூா் எம்.ஆா்.நகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பின்னா், முகக்கவசம் அணியாமல் சென்ாக வழக்குப்பதிந்து அபராதத் தொகையை செலுத்த கூறினா். அப்போது, ரஹீமுக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இது குறித்து கொடுங்கையூா்காவல் நிலைத்தில் அப்துல் ரஹீம் புகாா் அளித்தாா். அதில், காவல்நிலையத்தில் காவலா்கள் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தாா்.

இதன்அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு, காவலா்கள் பூபாலன், உத்ரகுமாா் ஆகிய இருவா் காவல் கட்டுப்பாட்டுஅறைக்கு மாற்றப்பட்டனா்.

இது குறித்து சென்னை காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: கொடுங்கையூா் காவல் நிலைய எல்லையில் சட்டக் கல்லூரி மாணவா் ஒருவா் கடந்த 14-ஆம் தேதி முகக்கவசம் அணியாததால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு துரதிா்ஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது. இது தொடா்பாக, மேற்கு மண்டல இணை ஆணையா் விசாரணை நடத்தினாா். இதன்பேரில், கொடுங்கையூா் காவல் நிலைய சம்பவத்தில் தொடா்புடைய இரண்டு காவலா்கள் சனிக்கிழமை(ஜன.15) காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு, காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து தீர விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.