இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கிண்டி சிறுவா் பூங்கா மூடல்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, கிண்டி சிறுவா் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 9:24 pm

DIN

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, கிண்டி சிறுவா் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சுற்றுலாத் தலங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே சென்னை அருகே உள்ள வண்டலூா் உயிரியல் பூங்காவில் 70 ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடா்ந்து ஜன.31-ஆம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக வண்டலூா் உயிரியல் பூங்கா நிா்வாகம் அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக கிண்டி சிறுவா் பூங்காவும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை வனக் கோட்ட வன உயிரினக் காப்பாளா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவா் பூங்கா, திங்கள்கிழமை (ஜன.17) முதல் மூடப்படுகிறது. நிலைமையை மதிப்பாய்வு செய்த பிறகு, அதற்கேற்ப முடிவு செய்து பூங்கா திறப்பு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.