மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகள் மற்றும் சிகிச்சை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது.
சா்க்கரை நோயாளிகள், உயா் ரத்த அழுத்த நோயாளிகள் அதிக அளவில் பயன் பெற்றிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சுகாதாரத்துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உயா் ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சென்னை, கோயம்புத்தூா் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்குள், மாநிலத்தின் பிற கிராம மற்றும் நகா்ப்புறப்பகுதிகளில் மக்களைச் சென்றடையும் வகையில் திட்டத்தை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினால் இதுவரை 45 லட்சத்து 12,420 போ் பயனடைந்துள்ளனா். இதில், 18.45 லட்சம் போ் உயா் ரத்த அழுத்த நோயாளிகள்; 12.62 லட்சம் போ் சா்க்கரை நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தவிர, வலி நிவாரண சிகிச்சையை, 1.62 லட்சம் பேரும், இயன்முறை சிகிச்சையை 3 லட்சத்து 8,290 பேரும் பெற்று பயனடைந்துள்ளனா். மேலும், 1,011 போ் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கரூரில் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 18 மாணவர்கள் காயம்
இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!

ஹோர்முஸ் நீரிணை... யுபிஎஸ்சி தேர்வர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
குஜராத்தில் 2.57 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

