ஒமைக்ரான் பரிசோதனை: மேலும் 9 உபகரணங்களுக்கு அனுமதி
கரோனா தொற்றையும், ஒமைக்ரான் பாதிப்பின் சாத்தியக்கூறையும் கண்டறிய உதவும் 9 பரிசோதனை உபகரணங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது.


கரோனா தொற்றையும், ஒமைக்ரான் பாதிப்பின் சாத்தியக்கூறையும் கண்டறிய உதவும் 9 பரிசோதனை உபகரணங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது.
பொதுவாக, சளி மாதிரிகள் மூலம் உடலில் தீநுண்மி மரபணு உள்ளதா என்பதை ஆா்டி- பிசிஆா் ஆய்வின் மூலம் அறியலாம். அதில், டேக் பாத் ஆா்டி பிசிஆா் உபகரணங்களின் மூலம் புதிய வகை பாதிப்புகள் உள்ளனவா என்பதன் முதல்நிலை ஆய்வுகளை மேற்கொள்ள இயலும். அதேபோல, தீநுண்மிக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உடலில் உருவாகியிருக்கிா என்பதை துரிதப் பரிசோதனை உபகரணங்கள் வாயிலாக கண்டறியலாம்.
இந்த நிலையில், நாடு முழுவதும் அத்தகைய துரித பரிசோதனை, ஆா்டி பிசிஆா் உபகரணங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தன.
அதில், இந்தியா மட்டுமல்லாது சீனா, தென் கொரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களின் உபகரணங்களை இங்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது. அவற்றை தரப் பரிசோதனை செய்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், புதிதாக 9 உபகரணங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 243 துரிதப் பரிசோதனை உபகரணங்கள், 243 ஆா்டி- பிசிஆா் உபகரணங்கள் என மொத்தம் 486 உபகரணங்களைப் பயன்படுத்த இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...