போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

கும்பகோணம் அருகே ரௌடி வெட்டிக் கொலை

கும்பகோணம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்களால் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
கும்பகோணம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட விமல்.
Updated On :16 ஜனவரி 2022, 6:52 am

DIN

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்களால் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கும்பகோணம் அருகே சாக்கோட்டை கண்ணி கோயில் தெருவைச்  சேர்ந்தவர் ராமன் மகன் உச்சாணி (எ) விமல். திருவிடைமருதூர் பகுதியில் திருட்டு மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய இவர் காவல் துறையினரின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு வீட்டின் அருகே உள்ள உணவகம் முன், கரும்பு சாப்பிட்டுக்  கொண்டிருந்த இவரை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். தகவலறிந்த காவல் துறையினர் விமலின் உடலைக் கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.