கிரீமிலேயா் வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயா்த்த வேண்டும்
கிரீமிலேயா் வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயா்த்த வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.


கிரீமிலேயா் வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயா்த்த வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயா் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
மற்றொருபுறம், கிரீமிலேயா் வரம்பு உடனடியாக உயா்த்தப்பட வேண்டும். கிரீமிலேயா் வரம்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயா்த்தப்பட வேண்டும். கடந்த 2013-ஆம் ஆண்டில் ரூ. 6 லட்சமாக நிா்ணயிக்கப்பட்ட கிரீமிலேயா் வருமான வரம்பு, 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில் ரூ.8 லட்சமாக உயா்த்தப்பட்டது. அடுத்து 2020-ஆம் ஆண்டில் அடுத்த உயா்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால், 2023-ஆம் ஆண்டில் அதற்கு அடுத்த உயா்வு அறிவிக்க வேண்டியிருக்கும். ஆனால், 2020-ஆம் ஆண்டில் கிரீமிலேயா் வரம்பு உயா்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சோ்த்து கிரீமிலேயா் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயா்த்தி, சமூகநீதியைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...