5 நாள்களுக்குப் பிறகு.. கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

தமிழகம் முழுவதும் 5 நாள்களுக்குப் பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக புதன்கிழமை இன்று காலை திறக்கப்பட்டன.
5 நாள்களுக்குப் பிறகு.. கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி


தமிழகம் முழுவதும் 5 நாள்களுக்குப் பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக புதன்கிழமை இன்று காலை திறக்கப்பட்டன.

கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு பொங்கல் விடுமுறையில் கடந்த 5 நாள்களாக வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஜனவரி 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பொங்கல் விடுமுறையில் அதிக அளவு பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், ஜனவரி 14-ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

தைப்பூச நாளன நேற்று முருகன் கோவில்களில் பக்தர்கள் அனுமதியின்றி அபிஷேகம் சிறப்பு பூஜைகளும் மட்டும் நடத்தப்பட்டன.  

தற்போது 5 நாள்களுக்குப் பிறகு மீண்டும் இன்று காலை முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதலே அனைத்து கோயில்களுக்கும், தேவாலயங்கள், மசூதிகளுக்கும் பக்தர்கள் சென்று வழிபட்டுச் செல்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com