கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக சிறுவனுக்கு முதல்வர் ஊக்கத்தொகை

சர்வதேச சதுரங்கப் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்த தமிழக சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 8 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:49 am

DIN

சர்வதேச சதுரங்கப் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்த தமிழக சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 8 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், சதுரங்க போட்டியில் 2019-ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம் மற்றும் 2022-ஆம் ஆண்டுகிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத் சுப்ரமணியம் அவர்களுக்கு 8 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

சென்னையில் 9-ம் வகுப்பு படித்து வரும் பரத் சுப்ரமணியன், 2013-ஆம் ஆண்டு முதல் தனது ஐந்தாவது வயதிலிருந்து மாநில, தேசிய மற்றும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று சிறப்பாக விளையாடிய பரத் சுப்ரமணியம் 2019-ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றார். மேலும், 2022- ஆம் ஆண்டில் தனது 14-வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பரத் சுப்ரமணியத்திற்கு 2019-ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 3 இலட்சம் ரூபாயும், 2022- ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 5 இலட்சம் ரூபாயும் சேர்த்து, மொத்தம் 8 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையினை முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் அபூர்வா, பயிற்சியாளர் ஷியாம் சுந்தர் மற்றும் பரத் சுப்ரமணியத்தின் பெற்றோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.