
அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சத்துணவு வழங்க தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஒமைக்ரான் கரோனா வகை பரவலையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருள்களுடன் 5 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஜனவரி மாதத்திற்கான வேலை நாள்களை கணக்கிட்டு பொருள்களை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.