புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மத்திய, மாநில அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: டிஜிபி

மத்திய, மாநில அரசு சின்னங்களை தவறாகப் பயன்படுத்தோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

News image

டிஜிபி சைலேந்திர பாபு

Updated On :20 ஜனவரி 2022, 1:23 pm

DIN

மத்திய, மாநில அரசு சின்னங்களை தவறாகப் பயன்படுத்தோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

பதவியில் இல்லாத முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் அரசு சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது எனவும் மீறிப் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக  டிஜிபி தெரிவித்துள்ளார்.

மேலும், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் தங்களின் வாகனம், விசிட்டிங் கார்டுகள், லெட்டர் பேட்களில் அரசு சின்னங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சட்டங்கள் மீறப்படும்போது சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் பொது மக்கள் புகாரளிக்கலாம் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.