ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

19வது மெகா கரோனா தடுப்பூசி முகாம்: 16.29 லட்சம் பேர் பயன்

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற 19 வது மெகா தடுப்பூசி முகாமில் 16.29 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :22 ஜனவரி 2022, 4:22 pm

DIN

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற 19 வது மெகா தடுப்பூசி முகாமில் 16.29 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற 19 வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 16,29,736 டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 9,31,03,288 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2.17 லட்சம் பேருக்கு இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இன்று மட்டும் 33,129 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியோர் சரியான நேரத்தில் 2ஆம் தவணையை செலுத்திக்கொள்ள வேண்டும். 
முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் உடலில் 6 மாதத்திற்கு பின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தாமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மையங்களில் 19 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.