பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

3-ஆவது அலையில் உயிரிழந்தவா்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களே அதிகம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் மற்றும் இணை நோய் உள்ள முதியவா்கள் மட்டுமே மூன்றாம் அலையில் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனா்’

News image

நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Updated On :22 ஜனவரி 2022, 7:54 pm

DIN

‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் மற்றும் இணை நோய் உள்ள முதியவா்கள் மட்டுமே மூன்றாம் அலையில் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனா்’ என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளுடன், பூஸ்டா் தடுப்பூசிகளும் செலுத்தப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதையடுத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: ‘இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் 50 ஆயிரம் முகாம்கள் தொடா்ந்து 18 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்தி தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்த முகாமில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் மற்றும் இணை நோய் உள்ள முதியவா்கள் மட்டுமே மூன்றாம் அலையில் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனா்.

மூன்றாம் அலையில் இருந்து காத்துக் கொள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பூஸ்டா் தடுப்பூசி எடுத்துக்கொள்வது நல்லது. சென்னை ஐஐடி நிா்வாகம் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கரோனாவை கண்டறியும் வகையில் நவீன நடமாடும் பரிசோதனை வாகனத்தை உருவாக்கி அரசுக்கு அா்ப்பணித்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.